ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

போதை ஒழிப்பு விழிப்புணர்வு... திருப்பூரில் பிரம்மாண்ட மாரத்தான்!

போதை ஒழிப்பு விழிப்புணர்வு... திருப்பூரில் பிரம்மாண்ட மாரத்தான்!

திருப்பூர் மாரத்தான்

திருப்பூர் மாரத்தான்

Tiruppur marathon | போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur | Tiruppur

திருப்பூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெங்கமேட்டில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சுப்பராயன், திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  3 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த மாரத்தான் நிகழ்ச்சி 4 பிரிவுகளாக நடைபெற்றது.

3 கிலோ மீட்டர் பிரிவு, 18 வயதுக்குட்பட்டோர் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் தனித்தனியாக பங்குபெறும் 5 கிலோ மீட்டர் பிரிவு, 10 கிலோ மீட்டர் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர், திருப்பூர்.

First published:

Tags: Local News, Tiruppur