திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய பள்ளியாகும். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இப்பள்ளியில் சேர மாணவிகள் போட்டி போடுவர். இங்கு 6,000க்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வை ஆயிரம் மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து பதினோராம் வகுப்பிற்கு அட்மிஷன் நடைபெற்று வருகின்றது. பெற்றோரின் கடைசி நேர சிரமங்களை தவிர்க்க தேர்வு முடிவு வெளியாகும் இந்நாளில் பிற பள்ளி மாணவிகள் விண்ணப்பம், அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம். தங்களது பெயர், முகவரி, ஏற்கனவே படித்த பள்ளி, பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை
http://www.javabaimghss.com என்ற இணையதள லிங்க்கில் பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும். அந்நாளில் முழு விபரங்களுடன் பள்ளிக்கு வந்தால் போதுமானது என ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பமேரி தெரிவித்தார்.
பெற்றோர்களின் நேரமின்மை மற்றும் மாணவிகளின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த ஆன்லைன் அட்மிஷன் நடைமுறை உள்ளதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பள்ளியின் முகவரி:
ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
ராயபுரம்,
திருப்பூர் - 641601
இ - மெயில்: jaivabaimghss@gmail.com
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : காயத்ரி வேலுசாமி, திருப்பூர்
உங்கள் நகரத்திலிருந்து(Tiruppur)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.