ஹோம் /நியூஸ் /Tiruppur /

Tiruppur : +2 பொதுத்தேர்வில் முதல் இடத்திலிருந்து 7 வது இடத்திற்கு பின்தங்கிய திருப்பூர் மாவட்டம்.

Tiruppur : +2 பொதுத்தேர்வில் முதல் இடத்திலிருந்து 7 வது இடத்திற்கு பின்தங்கிய திருப்பூர் மாவட்டம்.

 திருப்பூர்..

திருப்பூர்..

Tiruppur District :நடப்பு ஆண்டுக்கான+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முதல் இடத்திலிருந்த திருப்பூர் மாவட்டம் 7ம் இடத்துக்கு சரிந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் 7-வது இடத்தையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 30 ஆவது இடத்திலும்  திருப்பூர் கல்வி மாவட்டம் உள்ளது.

  கொரோனா பெருந்தொற்றிற்க்கு பிறகு  இரண்டு ஆண்டுகள் கழித்து அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.46 சதவீதத்துடன் 30ஆவது இடத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.50 சதவிதமும்  தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடத்தையும் பிடித்துள்ளது திருப்பூர் கல்வி மாவட்டம்.

  திருப்பூா் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 357 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 14,804  மாணவர்கள், 14 ,827 மாணவிகள்  என மொத்தம் 29,639 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதினர்.

  இதில் 12,459 மாணவர்கள் 13,753 மாணவிகள்,என 26,212 பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.

  தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.தற்போது 2021-2022 கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வை 218 பள்ளிகளை சேர்ந்த 24,395 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 96.57% மாணவியர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

  அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

  திருப்பூர்  கல்வி மாவட்டமானது  கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஏழாவது இடத்தை பிடித்திருந்தது. அதேபோல் 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்திருந்தது திருப்பூர் மாவட்டம். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 10 .07 சதவீதம் குறைந்துள்ளது.

  இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வினித் அவர்கள் கூறியதாவது,

  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளன. இதற்கான காரணங்களை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் கண்டறிந்து அவற்றை சரிசெய்து,  அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

  செய்தியாளர் - காயத்ரி வேலுசாமி, திருப்பூர்

  Published by:Arun
  First published:

  Tags: Tirupur