திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் உடன் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை துரத்தி துரத்தி தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில், கடந்த 14ஆம் தேதி அன்று பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இருவர் டீ குடிக்க வெளியே சென்ற போது அங்கு மதுபோதையில் இருந்த தமிழக இளைஞர்களுடன் சிகரெட் புகை ஊதியது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமிழக இளைஞர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாகவும் அதன் பின்னர் டீ இடைவெளிக்கு வெளியே வந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை தாக்க துரத்தியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,
திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீணாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுகொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur, Viral Video