முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் தமிழர்களை தாக்கினார்களா? - காவல் ஆணையர் விளக்கம்!

திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் தமிழர்களை தாக்கினார்களா? - காவல் ஆணையர் விளக்கம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்னை அல்ல

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வட இந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக செய்தி பகிரப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் திலகர் நகரில் உள்ள ரியா பேஷன்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் நபர் கடந்த 14-ம் தேதி அங்குள்ள தேநீர் கடைக்கு சென்றபோது அங்கு அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சிகரெட் பிடித்துள்ளனர். சிகரெட் புகை பட்டது தொடர்பாக அவர்களுக்கு இடையே சிறிய பிரச்னை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ரியா பேஷன் கம்பெனியில் பணிபுரியும் நபர் தனது நண்பர்களை அழைத்துவந்தபோது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக யாரும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் இது தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்னை அல்ல என்றும், தற்செயலாக இரண்டு நபர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இது சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: News18 Tamil Nadu