முகப்பு /செய்தி /திருப்பூர் / ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளி! - திருப்பூரில் பரபரப்பு

ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளி! - திருப்பூரில் பரபரப்பு

இறந்துபோன வடமாநில தொழிலாளி

இறந்துபோன வடமாநில தொழிலாளி

கார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநிலத் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறி சக தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றிவந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ள நிலையில், சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவற்றை காணவில்லை எனவும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி, ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர். ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையம் முன்பு வடமாநிலத் தொழிலாளர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

First published:

Tags: Crime News, Death, Migrant workers