ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

வனத்துறை அதிகாரி எனக்கூறி கள்ள நோட்டு அடித்து வந்த நபர் கைது... உடுமலையில் பரபரப்பு

வனத்துறை அதிகாரி எனக்கூறி கள்ள நோட்டு அடித்து வந்த நபர் கைது... உடுமலையில் பரபரப்பு

கைது செய்யப்பட்ட பிரபு

கைது செய்யப்பட்ட பிரபு

Thirupur Fake Currency | உடுமலை அருகே வனத்துறை அதிகாரி எனக்கூறி வாடகைக்கு வீடு எடுத்து கள்ள நோட்டு அடித்தவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து  கள்ள நோட்டுகள் மற்றும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் கொழுமம் பகுதியில் பிரபு என்பவர் தான் ஒரு வனத்துறை அதிகாரி என கூறி அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். திடீரென பிரபு வீட்டிற்கு வந்த கேரள மாநில போலீசார் நீண்ட நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்யப்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக  காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரலிங்க காவல்துறையினர் கேரளா போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போழுது பிரபு என்பவர் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஏற்கனவே குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் மற்றும் அழகர் என்கின்ற இரண்டு பேரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கள்ள நோட்டு கும்பல் மூன்று பேர் என ஐந்து பேரை கேரள மாநிலமான மறையூர் பகுதியில் கைது செய்யப்பட்டு இருப்பது தகவலில் தமிழக போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த ஒரு லட்சத்தி 78 ஆயிரம் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள்  கைப்பற்றப்பட்டது. கள்ள நோட்டு அடிக்க பயன்ப்படுத்தப்பட்ட இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை ஒரு வனத்துறை அதிகாரி எனக்கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டு அடிக்கும் பணியை செய்து வந்த பிரபுவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்: சக்திவேல் மலையாண்டி

First published:

Tags: Crime News, Local News, Tiruppur