Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து இந்தியில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து இந்தியில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை

இந்தியில் வைக்கப்பட்ட பேனர்

இந்தியில் வைக்கப்பட்ட பேனர்

திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அமர்த்தி தருவதற்காக பல ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து வைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பேனர் சர்ச்சையான நிலையில் அகற்றப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் நூற்பாலை, டையிங், காம்பேக்ட்டிங், எம்ராய்டரி, கோழி பண்ணை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை என இந்தி மொழியில் மட்டுமே பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வரும் சூழலில் வடமாநில தொழிலாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர் தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளது என்கிறார் ஏ.ஐ.டி.யு.சி பனியன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சேகர்.இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள.

இதையும் படிங்க: இயேசுவின் போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

பேனரை அகற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்கிறார் தந்தை பெரியார் திராவிட கழக மாவட்டத் தலைவர் முத்துக்குமார், திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அமர்த்தி தருவதற்காக பல ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு தொழிலில் தொடர்ந்து 3 மாதம் வேலை செய்தால், அவரை அமர்த்திய ஏஜென்சிக்கு நிறுவனங்கள் நான்காயிரம் ரூபாய் அளிக்கின்றன.அப்படி ஒரு நிறுவனம் அளித்த பேனர்தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை நியூஸ்18 தமிழ்நாடு சார்பில் கேட்டப்போது, ரயில் நிலையத்திற்கு அதிக அளவில் வெளிமாநிலத்தவர் வருவதால் இந்தியில் பேனர் வைக்கப்பட்டது என்றனர்.யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேனர் வைக்கப்படவில்லை, அருகில் உள்ள மற்றொரு இடத்தில் தமிழில் விளம்பரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

First published:

Tags: Hindi, Thiruppur