ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Tirupur | திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சம்பத் தனது மனைவி மற்றும் மகனுடன் அப்பகுதியில் தங்கி 6 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள நல்லசாமி என்பவர் தோட்டத்திற்கும் இடையே எல்லை சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் இரவு தண்ணீர் மோட்டாரை நிறுத்திவிட்டு சம்பத் வீட்டிற்கு சென்ற நிலையில் நல்லசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பத்தின் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை அகற்றிவிட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து நல்லசாமியிடம் கேட்டபோது ஜேசிபி வாகனத்தை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும் தகாத வார்த்தையால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காரணம் கூறி சம்பத் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உடலில் மண்ணெண்னையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

Also see... முகம் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு.. உயிருக்கு உயிரான தோழனே உயிரை பறித்தது அம்பலம்

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை  ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: District collectors, Farmer, Fire, Tiruppur