Home /News /tiruppur /

யானைக்கு சாலையில் நிகழ்ந்த பிரசவம் - உடுமலை அருகே வரிசையில் நின்ற வாகனங்கள்!

யானைக்கு சாலையில் நிகழ்ந்த பிரசவம் - உடுமலை அருகே வரிசையில் நின்ற வாகனங்கள்!

யானைக்கு- சாலையில் பிரசவம்

யானைக்கு- சாலையில் பிரசவம்

Elephant : சாலையில் ஈன்ற தனது குட்டியை தாய் யானை பாதுகாப்பாக சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லும் வரை வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள மாநிலம் மறையூர் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய யானைக்கு சாலையிலேயே பிரசவமானதால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி உள்ளது மறையூர், இந்த ஊர் தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

    உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்லும் வழியில் மறையூர் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலை நடுவே சுமார் ஒரு மணி நேரமாக அங்கேயே நின்றது.
    இதனால், சாலையில் வந்த வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானையை கண்டதும் அச்சத்தில் காரணமாக வாகனங்களை வரிசையாக் நிறுத்தினர்.

    அவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும், யானை சாலையை விட்டு நகராமல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த வாகன ஓட்டுகள் வாகனங்களை சிறிது தூரம் நகர்த்தி அருகில் சென்று பார்த்தனர். அப்போது யானை சாலையிலேயே குட்டியை ஈன்றது தெரியவந்தது.

    சாலையில் ஈன்ற தனது குட்டியை தாய் யானை பாதுகாப்பாக சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லும் வரை வாகன ஓட்டிகள் பொறுமை அங்கேயே காத்ததிருந்தனர். இதனால் மூணாறு சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை, அவ்வழியில் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் இந்த வைரலாகி வருகிறது.

    இதேபோல் வால்பாறை அருகே உள்ள எல்லைப் பகுதியான கேரள மாநிலம் அதிரப்பள்ளியை அடுத்த தும்பூர்மிழி வனச்சாலையில் நின்ற காட்டு யானைகளில் ஒன்று சாலை நடுவே நின்று அங்கும் இங்கும் சுற்றித்திரிந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சாலையில் வலம் வந்த யானை


    இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் சாலையிலேயே நிறுத்திவிட்டு தனது செல்போனில் மூலம் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த காட்டு யானை அங்கும் இங்குமாக ஓடியது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Must Read : பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடலாம்.. இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல்

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சாலக்குடி வனத்துறையினர் காட்டு யானையை சாலையில் இருந்து வனப்பகுதியில் விரட்டினர்.

    செய்தியாளர் - ம.சக்திவேல், பொள்ளாச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Elephant, Tiruppur

    அடுத்த செய்தி