ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

மருமகளே.. என் பையன் கிட்ட பேசு..! - பள்ளி மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிரியை

மருமகளே.. என் பையன் கிட்ட பேசு..! - பள்ளி மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிரியை

மாணவியை மருமகளே என அழைத்து மகனுடன் பேச வற்புறுத்திய ஆசிரியை பணியிட மாற்றம்...

மாணவியை மருமகளே என அழைத்து மகனுடன் பேச வற்புறுத்திய ஆசிரியை பணியிட மாற்றம்...

Tiruppur | திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாணவியை மருமகளே என அழைத்து மகனுடன் பேச வற்புறுத்திய ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா. இவரது வகுப்பில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என முறை வைத்து அழைத்து மருமகளாக பாவித்துள்ளார். அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும் பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பதும், இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது என பல வழிகளில் தொந்தரவு செய்து வந்துள்ளார். இரவு நேரத்தில் அலைபேசியை எடுக்க மறுத்தவர்களை மதிப்பெண்களில் கை வைப்பேன் என மிரட்டுவதும், மாணவர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மாணவிகளை தனது கணவரை இரவில் தூங்கும்போது நினைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி, தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக, பெற்றோர்கள் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருட்செல்வியிடம் புகார் செய்யப்பட்டது.

மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியில் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரடி ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை உதவியுடன் விசாரணை நடத்தினார்.  மாணவர்களிடம் கடிதம் மூலமாக ஒப்புதல் பெற்று, ஆசிரியை சாந்தி பிரியா மீது கூறப்பட்ட புகார் உண்மை என்பதை உறுதி செய்தனர்.

Also see... திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து ரவுடி உயிரிழப்பு.. 22 பேர் படுகாயம் - வடமாநில இளைஞரை தேடும் போலீஸ்

இதனையடுத்து  மாணவிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆசிரியையை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றுதல் செய்து உத்தரவிட்டார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Students, Teacher, Thiruppur