முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூர் இளைஞர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. நடந்தது என்ன?

திருப்பூர் இளைஞர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. நடந்தது என்ன?

தமிழக இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநிலத்தவர்கள்

தமிழக இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநிலத்தவர்கள்

Tiruppur News : திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்தி துரத்தி தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ம் தேதி பனியன் கம்பெனியில் பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் டீ இடைவேளைக்கு மாலை வெளியே வந்துள்ளனர். அப்போது அருகே இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் புகைத்துள்ளனர். அப்போது அங்கு மது போதையில் தமிழக இளைஞர்கள் 4 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், வடமாநில இளைஞர் தன் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறி தமிழக இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளியை தமிழக இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனை கண்ட மற்ற வடமாநில தொழிலாளர்கள் 4 தமிழக இளைஞர்களையும் துரத்தி துரத்தி அடித்துள்ளனர். இந்நிலையில், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலம்பாளையம் போலீசார் இதனைக்கண்டு அங்கு வந்தனர். இதையடுத்து, தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதேபோல் போலீசார் வருவதை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி சென்றனர்.

இதனிடையே, யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் தகராறு நடைபெற்றதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Tiruppur