ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

சொத்து தகராறில் பெற்ற தாயை கொலை செய்து வாய்க்காலில் வீசிய மகன்... உடுமலை அருகே கொடூர சம்பவம்

சொத்து தகராறில் பெற்ற தாயை கொலை செய்து வாய்க்காலில் வீசிய மகன்... உடுமலை அருகே கொடூர சம்பவம்

கைதான சதீஷ்குமார், கொலையான பூங்கொடி

கைதான சதீஷ்குமார், கொலையான பூங்கொடி

Son Killed His Mother Near Udumalai | உடுமலை அருகே சொத்து தகராறில் பெற்ற தாயை கொலை செய்து வாய்க்காலில் வீசிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன பாப்பன்னுத்தை சேர்ந்தவர் விவசாயி சபாபதி - பூங்கொ டி  தம்பதியினரின் மகன் சதீஷ்குமார். தனது தந்தை சபாபதிக்கு சொந்தமான சொத்தை தன் பெயரில் எழுதி மாற்றிக்கொடுக்குமாறு சதீஷ்குமார் அடிக்கடி தந்தையை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சதீஷ்குமாரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

  இந்நிலையில், தந்தை சபாபதி வேலை காரணமாக வெளியூர் சென்ற நேரத்தில் தாய் பூங்கொடிக்கும், சதீஷ்குமாருக்கும் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாய் பூங்கொடியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

  இதையும் படிங்க : கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சப்-கலெக்டர் ஆனேன் - நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

  அப்போது மயங்கி விழுந்த பூங்கொடி உயிரிழந்துள்ளார். பின்னர் தனது தாயை சதீஷ்குமார் அவரது தோட்டத்திற்கு அருகே உள்ள கால்வாயில் போட்டு விட்டு தலைமறைவாக இருந்துள்ளார்..

  இந்நிலையில், மனைவியை காணவில்லை என சபாபதி தளி காவல்நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

  அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அமராவதி அருகே உள்ள சாயப்பட்டறை பகுதியில் இருந்த சதீஷ்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க : பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டியவை - திருப்பூர் ஆட்சியர் முக்கிய அறிவுரை

  அதில் சதீஷ்குமா சொத்து தகராறு காரணமாக தனது தாயை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது . இதனையடுத்து தளி போலீசார் சதீஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் : ம.சக்திவேல் - பொள்ளாச்சி

  Published by:Karthi K
  First published:

  Tags: Murder, Thiruppur