Home /News /tiruppur /

பாடம் எடுக்கும் ஆசிரியர் பைக்கில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு..!

பாடம் எடுக்கும் ஆசிரியர் பைக்கில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு..!

இரு சக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நீள நல்லபாம்பு

இரு சக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நீள நல்லபாம்பு

Snake Rescue | வழக்கமாக பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தாலோ , மயில்கள் இறந்தாலோ , அறிய வகை பறவைகளை அடிபட்டு இருந்தாலோ வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு வந்து பாம்பு இடுக்கி அல்லது பாம்பு கொக்கிகள் கொண்டு பாம்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிடித்துச் செல்லவர். பறவைகளை பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவர்.

மேலும் படிக்கவும் ...
    திருப்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் மாட்டிக்கொண்ட 4 அடி நீள நல்லபாம்பு காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.

    திருப்பூர் - வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரையரசன். இவர் பள்ளி வளாகத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் பணி முடிந்ததும், இருசக்கர வாகனத்தை எடுக்க முயற்சித்த போது வாகனத்தின் முன்புறத்தில் பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டு சுருண்டு வண்டியின் முன் புறத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    பின்னர் இதுகுறித்து அவிநாசியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த அவர்கள் இரு சக்கர வாகனத்தின் உள்ளே இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ஸ்க்ரூ டிரைவர் (screw driver ) கொண்டு பாம்பினை வெளியில் வரச் செய்தனர்.

    வழக்கமாக பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு வந்து பாம்பு இடுக்கி அல்லது பாம்பு கொக்கிகள் கொண்டு பாம்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிடித்துச் செல்லவர்.



    இந்நிலையில் பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் இருவரும் ஸ்க்ரூ டிரைவர் மற்றும் பாம்பு கொக்கி கொண்டு பாம்பினை பிடித்துள்ளனர். பின்னர் வனப்பகுதிக்குள் விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இச்சம்பவத்தில் பாம்பு யாரையும் கடித்தது போன்று எவ்வித நிகழ்வும் நடைபெறவில்லை. ஆசிரியரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று விட்ட காரணத்தால் விபரீதம் எதுவும் ஏற்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Snake, Tiruppur

    அடுத்த செய்தி