ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  திருப்பூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பூர் அவிநாசி சாலையில் விவேகானந்தா சேவாலயம் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Tamil News, Tiruppur