Home /News /tiruppur /

திருப்பூரில் பேய் விரட்டுவதாக கூறி பெண்களை குடிக்க வைத்து நாகினி ஆட்டம் ஆட வைத்த சாமியார்... வீடியோ வெளியானதால் பரபரப்பு...

திருப்பூரில் பேய் விரட்டுவதாக கூறி பெண்களை குடிக்க வைத்து நாகினி ஆட்டம் ஆட வைத்த சாமியார்... வீடியோ வெளியானதால் பரபரப்பு...

அருள் வாக்கு சுவாமி ஜி - திருப்பூர்

அருள் வாக்கு சுவாமி ஜி - திருப்பூர்

Tiruppur | பெண்களை குடிக்க வைத்து நாகினி ஆட்டம் ஆட வைத்து பேய் விரட்டுவதாக கூறி வீடியோ வெளியிட்ட சாமியாரால் திருப்பூரில் பரபரப்பு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் அடுத்த தோட்டத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் வாக்கு சுவாமிஜி. இவர் அந்த பகுதியில் குடில் ஒன்றை அமைத்து அமாவாசை தோறும் இரவு நேரங்களில் சிறப்பு யாக பூஜை நடத்தி வருகிறார். அப்பொழுது பேய் விரட்டுவதாக கூறி தன்னை நாடி வரும் பலருக்கும் விநோதமான முறையில் பேய் ஓட்டி வருகிறார். இவர் பேயை விரட்டும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

    அதில் தஞ்சையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரமேஷ் என்ற ஆண் பேய் பிடித்துள்ளதாகக் கூறி பேய் விரட்டும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் உடலில் இருந்து ரமேஷ் என்னும் பேய் பேசும் காட்சிகள் திகில் படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

    ரமேஷ் என்கிற அந்த நபர் மது அருந்திவிட்டு பல்சர் பைக்கில் வெளியே சென்ற பொழுது விபத்தில் இறந்துவிட்டதாகவும், ஆவியாக அலைந்து கொண்டிருந்த போது தனியே வந்த பெண்ணை பிடித்துக் கொண்டதாகவும் உயிரிழந்த ஆவியே உடலுக்குள் இருந்து சாமியாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது.

    வழக்கம்போல் எல்லா பேய்களுக்கும் பிடித்த, குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து பேயிடம் பேரம் பேசி சென்றுவிடுமாறு வலியுறுத்துகிறார் சாமியார். பெண் உடலுக்குள் இருக்கும் உயிரிழந்த ரமேஷின் ஆவி குவாட்டரை வாங்கி மடமடவென குடித்து விட்டு பிரியாணியை ஒரு வெட்டு வெட்டி விட்டு  உடலைவிட்டு வெளியேறுகிறது.

    இதே போல மற்றொரு பெண்ணின் உடலில் வெள்ளை நாகம் புகுந்துள்ளதாகவும் அதனை விரட்டுவதாக கூறி நாகினி ஆட்டம் ஆட வைத்துள்ளார் சாமியார். வெள்ளை நாகம் எப்படி உடலுக்குள் வந்தது என அதனிடமே விசாரித்து உண்மையை வாங்கும் சாமியார் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி சொம்பு நிறைய பால் கொடுத்து அதனை விரட்டுகிறார்.



    Also see... மதுபோதை ஆசாமிகளை குறிவைத்து பிக் பாக்கெட் - வைரல் வீடியோ

    தொடர்ந்து இவர் பேய் விரட்டும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது இவரது எண் அனைத்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இவரது அருள்வாக்கு மையத்தில் இருப்பவர்களும் சரியான தகவல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர், திருப்பூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி