ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

அரிசி ஆலைகள் 25 கிலோ பைக்கு பதிலாக 26 கிலோ அரிசி பையாக தயாரிக்க காரணம் என்ன?

அரிசி ஆலைகள் 25 கிலோ பைக்கு பதிலாக 26 கிலோ அரிசி பையாக தயாரிக்க காரணம் என்ன?

அரிசி

அரிசி

Tiruppur district News : திருப்பூரில் 25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட அரிசிகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளதால், பெரும்பாலான அரிசி ஆலைகள் 25 கிலோ பேக்கிற்கு பதிலாக 1 கிலோ கூடுதலாக சேர்த்து 26 கிலோ அரிசி பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை அமல்படுத்தியது மத்திய அரசு. அதன்படி 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட பிராண்ட் மற்றும் நான் பிராண்ட் (Brand & Non brand) அரிசிகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலை கூடுதல் ஆனது.

ரகத்திற்கு ஏற்றபடி அரிசி உள்ள நிலையில், தோராயமாக 1000 ருபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங் , 5% வரி விதிப்பிற்கு பிறகு 50 ருபாய் உயர்ந்து 1050 க்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பேக்கிங் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. உணவு துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேசிய பின்பே இந்த 26 கிலோ பேக்கிங் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறுகின்றனர் திருப்பூ அரிசி வியாபாரிகள்.

25 கிலோ அரிசி பேக்கிங்கிற்கு பதிலாக 1 கிலோ கூடுதலாக வைத்து 26 கிலோ பேக்கிங் செய்யும் போது மக்களுக்கு 50 ருபாய் குறைவாக கொடுக்க முடியும் என்கின்றனர் அரிசி வியாபாரிகள். LMA Legal Metrology Act விதிகளின் படி ஒவ்வொரு 5 கிலோ எடை கொண்ட பேக்கிங் தான் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்ததாகவும், தற்போது அந்த சரத்து ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி விதிகளின் படி 25 கிலோவிற்கு மேல் செல்லும் போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்திய பின்பே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.

26 கிலோ அசிரி பேக்

25 கிலோவிற்கு உட்பட்டது சில்லறை வணிகம் என்றும் , 25 கிலோவிற்கு மேல் உள்ளது மொத்த வியாபரம் என்றும் பிரித்துள்ள நிலையில் ஜி.எஸ்.டி விதியின் படி, அரிசிக்கு சில்லறை வர்த்தகம் செய்வதற்கு மட்டுமே 5% வரி விதித்துள்ளதாகவும் , அதனால் 26 கிலோ பேக்கிங் செய்வது முழுக்கவே சட்டத்திற்கு உட்பட்டது என்றும் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீரென விதிக்கப்பட்ட வரியால், அரிசி வாங்கும் போது அரிசி விலை தான் கூடிவிட்டதாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் வரி விதிப்பின் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்து வியாபாரம் செய்து வந்த நிலையில், இந்த 26 கிலோ பேக்கிங் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

Must Read : இவ்வளவு நகை போட்டிருந்தா உதவித்தொகை தர மாட்டாங்க... மூதாட்டியிடம் நைசாக பேசி ஏமாற்றிய மர்மபெண்

இருப்பினும், சிறிய குடும்பமாக உள்ளவர்கள் பெரும்பாலும் 5 கிலோ, 10 கிலோ பேக்கிங் அரிசி தான் வாங்குகின்றனர். இந்நிலையில் அதற்கான ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்தே வசூல் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Published by:Suresh V
First published:

Tags: GST, GST council, Rice, Tiruppur