ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற சைக்கோ வாலிபர்.. உடுமலை அருகே பரபரப்பு..!

பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற சைக்கோ வாலிபர்.. உடுமலை அருகே பரபரப்பு..!

கைதான சைக்கோ வாலிபர்

கைதான சைக்கோ வாலிபர்

Tiruppur News : உடுமலை அருகே பெண்ணை கொடூரமாக அடித்து கொலை செய்த சைக்கோ பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புக்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி  தனலட்சுமி(40), மன நிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார். அப்போது கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள்  அடிப்படையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் உத்தரவின்பேரில் உடுமலை சரக துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : மதுரை அழகர் கோயில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி... பாஜக நகர தலைவர் கைது

மேலும் கொலை நடந்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த செல்போன் சிக்னல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, “உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மகன் ஆரோக்கிய தாஸ்(31), பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர்  காதல் திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக இவர் புக்குளம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவில் ஆரோக்கியதாஸ் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த தனலட்சுமியின் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்தது தெரியவந்தது.

மேலும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். அத்துடன் மேட்டுப்பாளையத்தில் ரயிலில் சங்கிலி பறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை தாக்கி விட்டு டிவியை திருடியதும் தெரியவந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து ஆரோக்கியதாஸை  நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 2 நாட்களில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் : சக்திவேல் - பொள்ளாச்சி

First published:

Tags: Crime News, Local News, Murder, Tiruppur