முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

திருப்பூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Tiruppur District | திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 16.12.2022 காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் -641604 என்ற முகவரியில் நடைபெறும்.

இந்த முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.

வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

16.12.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூடுதல் கல்விபதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைவிண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெறவிண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

இந்த பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Employment, Job Fair, Local News, Tiruppur