ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

சாதியை சொல்லி திட்டியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி : காவலர் மீது வன்கொடுமை வழக்கு பாய்ந்தது!

சாதியை சொல்லி திட்டியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி : காவலர் மீது வன்கொடுமை வழக்கு பாய்ந்தது!

கைதான காவலர் அருள்குமார்

கைதான காவலர் அருள்குமார்

Tiruppur District News : திருப்பூரில் திருமணமானதை மறைத்து வேறொரு பெண்ணை காதலித்து சாதியின் பெயரை கூறி திட்டிய காவலர் வன்கொடுமை வழக்கில்  கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த அருள்குமார் திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் காவலராக பணி பணிபுரிந்து வருகிறார்.

ஏற்கனவே இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதை மறைத்து அவிநாசியை சேர்ந்த 27 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். மேலும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என கூறி அந்த பெண்ணின் ஜாதியின் பெயரை கூறி திட்டி உள்ளார்.

இதனால் மன உளைச்சலான அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பெண்ணின் தாயார் அவரை மீட்டு அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இதையும் படிங்க : இனி விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை... தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெண்ணின் தாயார் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அருள்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் செய்தியாளர் - பாலாஜி பாஸ்கர்

First published:

Tags: Crime News, Local News, Tiruppur