ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

குடிநீர்

குடிநீர்

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) குடிநீர் விநியோகம் தடைபடும் இடங்கள் குறித்து, மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம்  தடை செய்யப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர் பகுதிகளில், மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குடிநீர் விநியோகம் செய்யப்படும் தலைமை நீரேற்று நிலையம், மேட்டுப்பாளையத்தில் புதிய மின் இணைப்பு வழங்க, தமிழ்நாடு மின் வாரியத்தினரால் மின் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனல், குடிநீர் இறைப்பு பணிகள் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரு தினங்கள் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 46, 47, 48, 49, 50, 51 & 56 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் 16.12.2022 (நாளை)  குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

மேலும் 17.12.2022 (சனிக் கிழமை) முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Drinking water, Local News, Tiruppur