Home /News /tiruppur /

நொய்யல் ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய நல்லம்மன் கோயில்.. கரையில் பொங்கல் வைத்து வழிபட்ட ஊர் மக்கள்

நொய்யல் ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய நல்லம்மன் கோயில்.. கரையில் பொங்கல் வைத்து வழிபட்ட ஊர் மக்கள்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூழ்கிய நல்லம்மன் கோவில்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூழ்கிய நல்லம்மன் கோவில்

Tiruppur | நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நல்லம்மன் கோவில் மூழ்கி உள்ள நிலையிலும்,  அணைக்காக உயிர் தியாகம் செய்த நல்லம்மனுக்கு ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து மக்கள் வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூரை அடுத்த மங்கலம் அருகில் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும் போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்த காரணத்தால் உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை  கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும், இதனால் நல்லம்மனுக்கு இந்த ஊர் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில்  நேற்று நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து கோவில் விழா குழுவினர் ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

    Also see... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...



    நல்லமன் தடுப்பணைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்தபோதும் ஆற்றங்கரையில் பச்சை குடிசை அமைத்து நல்லமனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர்: பாலஜி பஸ்கர், திருப்பூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flood, Tiruppur, Worship forefathers

    அடுத்த செய்தி