Home /News /tiruppur /

திருப்பூரில் பேருந்துக்குள் மழை... பயணிகள் அவதி...

திருப்பூரில் பேருந்துக்குள் மழை... பயணிகள் அவதி...

திருப்பூர்

திருப்பூர்

Tirupur District : திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், பேருந்தினுள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் கேரளாவில் துவங்கி உள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 3 மணி முதல் மாவட்ட முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அரசு நகர பேருந்துகள் முறையாக பராமரிக்காததால்,  மழை நீர் பேருந்து முழுமைக்கும் ஒழுகியதால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் நின்றபடியே பயணித்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழையின் காரணமாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலையில் இருந்து அமராவதி நகர் வரை இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து வழித்தட எண் 10-B ல் மேற்கூரை முறையாக பராமரிக்கப் படாமல் ஓட்டை உடைசலுடன் இருந்துள்ளது. அதனை சரி செய்யாமல் இயக்கப்பட்டு வருவதால், இன்று பெய்து வரும் சாரல் மழையின் போது பேருந்து முழுவதும் ஆங்காங்கே மழை நீர் ஒழுகி இருக்கைகள் நனைந்து பயணிகள் அமர முடியாமல் நின்று கொண்டே பயணித்தனர்.

    பேருந்தினுள் மழை நீர்..


    தொடர்ந்து இந்த பேருந்தானது இதே நிலையில் பராமரிக்கப்படுவதால் காலை மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்யும் போது பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நனைந்த வண்ணமே பயணித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Also see... 25 லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் சிறுமி...

    இதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலை 4 மணி முதல் பல்லடம் அவிநாசி, தாராபுரம் மற்றும் காங்கயம் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்தது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus, Heavy rain, Rainfall, Tiruppur, Tirupur

    அடுத்த செய்தி