முகப்பு /செய்தி /திருப்பூர் / தொழிலாளியின் லுங்கியை அவிழ்த்த பெண்... பல்லடம் அருகே கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

தொழிலாளியின் லுங்கியை அவிழ்த்த பெண்... பல்லடம் அருகே கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

தொழிலாளியின் லுங்கியை அவிழ்த்த பெண்

தொழிலாளியின் லுங்கியை அவிழ்த்த பெண்

Tiruppur News : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பஞ்சாயத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தொழிலாளியின் லுங்கியை அவிழ்த்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பஞ்சாயத்தில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவராக பாஜகவை சேர்ந்த அசோக் என்பவர் உள்ள நிலையில் நேற்று பொதுமக்கள் பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது பஞ்சாயத்து நிர்வாகம் பொதுமக்களுக்கு முறையாக கிராம சபை கூட்டத்துக்கான தகவல்களோ, தண்டராவோ  கூறவில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வரவில்லை. ஏன் யாரையும் அழைக்கவில்லை என்று பனியன் தொழிலாளி முருகேசன் என்பவர் கிராம சபை கூட்டத்தில் இருந்த தலைவர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் இருக்கும் கண்ணகி என்ற பெண் அவரிடம் தன்னிடம் தான் கேட்கவேண்டும் என்று பதில் தெரிவித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து முருகேசன் “உன்னிடம் கேள்வி கேட்கவில்லை” என்று திரும்பத் திரும்ப பதில் தெரிவிக்க கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண் எழுந்து சென்று அவரின் லுங்கியை இழுத்து திடீரென பிடுங்கினார். கிராம சபை கூட்டத்தில் பேசிய ஒரு ஆணின் லுங்கியை பெண் ஒருவர் அவிழ்த்து விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Local News, Tiruppur