Home /News /tiruppur /

’சதுரங்கவேட்டை’ பட பாணியில் ஆசையை தூண்டி 5 லட்சத்தை அபேஸ் செய்த வடமாநில இளைஞர்!

’சதுரங்கவேட்டை’ பட பாணியில் ஆசையை தூண்டி 5 லட்சத்தை அபேஸ் செய்த வடமாநில இளைஞர்!

 ரோகித் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக ஒரு இடத்தில் குழி தோண்டிய போது ஒரு பானையில் தங்கம், பழங்கால நாணயம் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

ரோகித் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக ஒரு இடத்தில் குழி தோண்டிய போது ஒரு பானையில் தங்கம், பழங்கால நாணயம் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

ரோகித் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக ஒரு இடத்தில் குழி தோண்டிய போது ஒரு பானையில் தங்கம், பழங்கால நாணயம் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

’சதுரங்கவேட்டை’ பட பாணியில் போலி நகையை விற்று ஐந்து லட்சத்தை ஆட்டையை போட்ட வட மாநில கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

உணவருந்த சென்ற வடமாநில வாலிபர் உணவக உரிமையாளரிடம் நைசாக பேசி பைசா கறந்து சென்று கல்தா இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம் புதையல் ஆசை காட்டி ஓட்டல் உரிமையாளரிடம் 5 லட்சம் நூதன மோசடி நடந்தது குறித்த செய்தி.

திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியில் உள்ள பசும்பொன் தேவர் வீதியை சேர்ந்தவர் பாலு. 45 வயதான இவர் மண்ணரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மே 15ம் தேதி அவரது ஹோட்டலுக்கு சாப்பிட வந்த வடமாநில இளைஞர் ஓட்டல் உரிமையாளரான பாலுவிடம் தன்னை ரோகித் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாலு இந்தி மொழியில் பேசுவதனால் வடமாநில இளைஞரும் இந்தியில் பேசி பழகியிருக்கின்றார். இந்தநிலையில் ரோகித் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக ஒரு இடத்தில் குழி தோண்டிய போது ஒரு பானையில் தங்கம், பழங்கால நாணயம் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அப்போது விக்டோரியா மகாராணி படம் பதித்த நாணயத்தையும், தங்க காசு மாலையையும் காண்பித்திருக்கின்றார். 80 லட்சம் மதிப்பிலான இதனை குறைந்த விலையிலே விற்கப்போவதாகவும் பாலுவிடம் தெரிவித்திருக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்களே புதையல் மாலையை வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் இந்த தங்க மாலை தங்கமா இல்லையா என்பதனை அறிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு பகுதியினை கழட்டி தருவதாக தெரிவித்த வடமாநில இளைஞர் ஒரு பகுதியினை கழட்டி பாலுவிடம் தந்திருக்கின்றார். பாலு அதனை தங்க நகை கடையில் உரசி பார்த்திருக்கின்றார். அது தூய தங்கமென பாலுவிடம் கடைக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் தங்கத்தை வாங்க ஆசைப்பட்ட பாலு தங்கத்தின் விலை குறித்து கேட்டுள்ளார்.

அதற்குள்ளாக கோயமுத்தூருக்கு வடமாநில இளைஞன் சென்றுவிட்டதாகவும் தங்கம் வேண்டுமென்றால் கோயமுத்தூருக்கு வரவேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றார். 80 லட்சம் மதிப்பிலான எடை அளவு கொண்ட ஆபரணம் 5 லட்சத்துக்கு தருவதாக வடமாநில இளைஞன் தெரிவித்திருக்கின்றான். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள வடமாநில இளைஞனிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடலாமென நினைத்து ஓட்டல் ஓனர் பாலு பணம் புரட்ட ஆரம்பித்திருக்கின்றார்.

ரொக்கமாக கையிருப்பில் ஐந்து லட்சம் இல்லாததனால் மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் புறட்டியிருக்கின்றார்.  பின்னர் ஐந்து லட்சம் பணத்துடன் மே 20ம் தேதி திருப்பூரில் இருந்து கோவைக்கு காரில் மனைவியுடன் சென்றிருக்கின்றார். காந்திபுரம் பகுதியில் உள்ள டாக்டர் நஞ்சப்பா சாலைக்கு வந்ததும் பாலு செல்போனில் வட மாநில இளைஞர் ரோகித்தை அழைத்திருக்கின்றார்.

ரோகிதுடன் இருவர் வந்திருக்கிறார். பாலுவிடம் அவர்களை கிரன் குமார் என்று அறிமுகப்படுத்தியிருக்கின்றார். மற்றொருவர் வயதான பெண்மணி. பாலு வடமாநிலத்தவரிடம் காரில் வைத்து 5 இலட்ச ரூபாய் பணத்தை கொடுத்து,  தங்கத்தை பெற்றுக் கொண்டு திருப்பூருக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 28 ம் தேதியன்று பாலு தங்க நகையை சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது போலியான தங்கத்தை கொடுத்து இருப்பதும், தன்னை அந்த நபர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. போலியான தங்கத்தை கொடுத்து 5 இலட்ச ரூபாய் பணம் ஏமாற்றி இருப்பதாக பாலு கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தந்த நிலையில் புகாரின் பேரில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Tiruppur

அடுத்த செய்தி