6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர பேட்ரி டெஸ்ட் என்ற திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னெம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவதாக திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளிக்கான உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும், அதற்காக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என்று கூறிய அமைச்சர், விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது , உடல்ரீதியாகம் மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைகிறோம். இதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார்.
உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் அதில் இருப்பதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ், பின்னர் பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கனியாமூர் நிகழ்விற்கு பிறகு பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை என கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளகுறிச்சியில் நடந்துள்ளது. குழந்தைகள் முழுமையாக தன்னெம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும்.
இது போன்ற சம்பவங்களில் காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதில் இருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, Psychology, School students, Sports, Tirupur