ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூரில் காந்தி ஜெயந்தி அன்றும் மது விற்பனை... போலீசார் ஆதரவாக செயல்பட்டதாக புகார்

திருப்பூரில் காந்தி ஜெயந்தி அன்றும் மது விற்பனை... போலீசார் ஆதரவாக செயல்பட்டதாக புகார்

Tiruppur | திருப்பூரில் காந்தி ஜெயந்தி அன்றும் படுஜோராக மது விற்பனையானது. டாஸ்மாக்கை திறந்து மது பாட்டில்களை எடுத்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் அருகே பெட்ரோல் பங்க் பக்கத்தில் அமைந்திருக்கும் 1915 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை மதுபான கூடத்தில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட மதுபான கூடத்தில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வந்துள்ளது.

அங்கேயே மது அருந்திய மது பிரியர்கள் அப்பகுதியில் தகராறு செய்து வந்துள்ளனர். மது போதை ஆசாமிகளின் அட்டகாசம் தாங்க முடியாத அப்பகுதியை சேர்ந்த நபர் மது விற்பனையை வீடியோவாக எடுத்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக அளித்தார். அதில் கள்ள சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதும், ஏராளமானோர் மது பாட்டில்களை வாங்கி செல்வதும் அங்கேயே மது அருந்திய நபர் சட்டையை கழற்றி  தகராறு செய்வதும் பதிவாகி உள்ளது.

மேலும் டாஸ்மாக் கடையை திறந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை எடுத்து விற்பனை செய்து உள்ளனர்.  டாஸ்மாக் கடை ஊழியர்கள் கள்ள சந்தை விற்பனைக்கு  உதவியாக இருந்துள்ளனர்.

Also see... எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார்: தனியரசு

திருப்பூர் மாநகரின் மையப்பகுதியான பெருமாநல்லூர் முக்கிய சாலையில் அமைந்துள்ள மதுபான கூட்டத்தில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் மது விற்பனையை போலீசார் தடுத்து நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Tasmac, Tiruppur