ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் சடலம்.. உடுமலை அருகே அதிர்ச்சி!

வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் சடலம்.. உடுமலை அருகே அதிர்ச்சி!

பெண் மரணம்

பெண் மரணம்

உடுமலைப்பேட்டை அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி போலீசார் யார் அவர் என விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Udumalaipettai | Tiruppur

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் செக்கனோடை வாய்க்காலில் பெண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் வாய்க்காலில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இறந்த பெண் உடல் அடையாளம் காண முடியாத அளவு முகம் மற்றும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்தவர் யார் என்பது தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

  இதையும் படிங்க | ஊராட்சி தலைவர் வெட்டிப் படுகொலை.. சென்னை அருகே நடந்த கொடூரம்!

  மேலும் இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை யாராவது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசிப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும் மடத்துக்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல்., பொள்ளாச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Dead body, Tirupur, Udumalaipet