Home /News /tiruppur /

திருப்பூரில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலையிழக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்

திருப்பூரில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலையிழக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்

திருப்பூர் பின்னலாடை

திருப்பூர் பின்னலாடை

200 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பனியன் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் அதனை வாங்க பொதுமக்கள் முன் வராத சூழலில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பனியன் ஆடைகள் தேக்கம் அடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
நூல் விலை உயர்வு காரணமாக புதிய ஆர்டர்கள் இன்றி மூடப்பட்டு வரும் பின்னலாடை நிறுவனங்கள் வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் என வேலைவாய்ப்பை வழங்கி வந்த திருப்பூரில் வேலை இன்றி தவிக்கும் தொழிலாளர்கள் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூர் என்றாலே எப்போதும் வேலை என தொழிலாளர்களை வரவேற்கும் ஒரு நகராக விளங்கி வந்தது இங்கு பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பனியன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சிறு குறு என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

இதைபற்றி, சௌந்தரபாண்டியன் (தொழிலாளி) கூறும்போது, நூல் விலை உயர்வு வரலாறு காணாத வகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது ஒரு குவிண்டால் பஞ்சு விலை 46 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் நூல் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பனியன் ஆடைகளிலும் எதிரொலித்துள்ளது. இதன் விளைவு வர்த்தகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. 200 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பனியன் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் அதனை வாங்க பொதுமக்கள் முன் வராத சூழலில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பனியன் ஆடைகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே புதிய ஆர்டர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக உற்பத்தியை நிறுத்தி மூடப்பட்டு வருகிறது திருப்பூரில் சுமார் 70 சதவிகிதம் சிறு குறு நிறுவனங்கள் முற்றாக உற்பத்தியை நிறுத்தியுள்ளது. செயல்படும் நிறுவனங்களும் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

Also Read : சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்ன வேலை.. கோவையில் திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..

மேலும் இதைபற்றி பனியன் உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் செந்தில்வேல், இந்த காலகட்டம் தீபாவளி கிறிஸ்துமஸ் புத்தாண்டு என விழா காலங்கள் அடங்கியது என்பதால் எப்போதும் உற்பத்தி களைகட்டும் இரவு பகல் என வேலை கடுமையாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு ரஷ்யா உக்கரின் போர் காரணமாக ஐரோப்பாவில் நிலை வரும் மந்த நிலை காரணமாக ஏற்றுமதி ஆர்டர்களும் பெருமளவு சரிந்துள்ளது அதேபோல் விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டு வர்த்தகமும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது இதனால் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகாமல் பல நிறுவனங்கள் வேலையை நிறுத்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிய திருப்பூர் முற்றாக அதன் பொலிவை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் இத்தொழிலை இணைந்து பாதுகாக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து உற்பத்தியாளர் சதாசிவம் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த காட்டன் கார்பரேஷன் ஆஃப் இந்தியா வாங்கும் பருத்தியை நேரடியாக நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும், மாறாக இடைத்தரகர்கள் பெறுவதால் கடுமையான விலை ஏற்றம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பின்னலாடை துறைக்கு திருப்பூரை மையமாக கொண்டு தனி ஆணையம் உருவாக்கி தொழில் துறையின் இடர்பாடுகளை களைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read : நாடுகளை கடந்த காதல்.. தென் கொரிய பெண்ணை திருமணம் செய்த திருப்பத்தூர் இளைஞர்

மேலும் தமிழகத்தில் ஆடை உற்பத்தி திருப்பூர் மட்டுமல்லாது ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இது போன்ற இக்கட்டான நிலையில் மின்சார கட்டண உயர்வை அமல்படுத்தினால் தொழில்துறையினர் கடுமையாக பாதிப்படைந்து ஆடை உற்பத்தி தொழில் பிற மாநிலங்களுக்கு செல்லும் சூழல் ஏற்படும் எனவே மின்கட்டணத்தை உயர்த்த கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் TEAMA டீமா சங்க தலைவர் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் முத்துரத்தினம்.

இடைவிடாது கேட்ட உற்பத்தி சத்தம் தற்போது கொஞ்சம் அடங்கி போய் உள்ளதால் தொழிலாளர்கள் கலக்கத்தில் இருந்தாலும் எப்போதும் போல இந்த முறையும் திருப்பூர் மீண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Published by:Raj Kumar
First published:

Tags: Handloom workers, Job, Tiruppur

அடுத்த செய்தி