திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.15000 சம்பளத்தில், 31 பேருக்கு லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் 31 லேப் டெக்னீசியன் காலிப்பணியிடங்கள் நிரப்படுகின்றன. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிஎம்எல்டி. முடித்திருக்க வேண்டும். இதற்கு சம்பளம் :மாதம் ரூ.15,000. வயது வரம்பு : 18 முதல் 59க்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி, திருப்பூர் மாவட்டம் 641068 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க : பொது கழிப்பிடம் குறித்து புகார் அளிக்க திருப்பூருக்கு வந்தாச்சு புதிய வசதி
1. மேலும், விண்ணப்பங்களின் உறையின் மீது ‘ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 தொகுப்பூதிய பணியிட
விண்ணப்பம் “ என கட்டாயமாக குறிப்பிடவும்.
2. விண்ணப்பங்களை தபால், அல்லது, (E-Mail Id) : mesectiongmctpr@gmail.com என்ற மெயில் வாயிலாகவும் அனுப்பலாம்.
3. விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் அனுபவ சான்று
இணைக்கப்படவேண்டும்.
4. ஆய்வுக் கூட நுட்புநர் நிலை - 2 பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவக் கல்லூரி
அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.
மேலும் விவரங்கள் அறிய https://tiruppur.nic.in/ta/ அல்லது https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022111164.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Local News, Tiruppur