முகப்பு /செய்தி /திருப்பூர் / கள்ளத்தொடர்பு விவகாரம்... மனைவியின் கள்ளக்காதலனை குத்திகொன்ற வடமாநில இளைஞர்!- திருப்பூரில் பயங்கரம்!

கள்ளத்தொடர்பு விவகாரம்... மனைவியின் கள்ளக்காதலனை குத்திகொன்ற வடமாநில இளைஞர்!- திருப்பூரில் பயங்கரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tiruppur murder | ஒரே தெருவில் இருந்ததால் ஜார்க்கண்ட் மாநில இளைஞரின் மனைவிக்கும், பீகார் மாநில இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur | Tiruppur

திருப்பூரில் தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பீகார் மாநில இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ், திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி  பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே போல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்தரதாரியும் அதே நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார். உபேந்தரதாரி  மனைவி சித்ராதேவியுடன் பவன்யாதவிற்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை ஒரு கட்டத்தில் உபேந்தரதாரி அறிந்து கொண்டார். இது குறித்து நேரடியாக பவன் யாதவிடம் கேட்டு விடலாம் என யோசித்த உபேந்தரதாரி, நேற்று இரவு பவன் யாதவ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் சிறுது நேரம் கை கலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த உபேந்தரதாரி, தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை என சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த பவன் யாதவை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பவன் யாதவின் சடலத்தை கைப்பற்றி தப்பியோடிய உபேந்தரதாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர், திருப்பூர்.

First published:

Tags: Crime News, Illegal affair, Local News, Tiruppur