ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

குப்பை மேட்டில் பெண் சடலம்.. கணவனுக்கு வந்த போன்கால்.. திருப்பூர் பெண் கொலையில் பகீர் தகவல்

குப்பை மேட்டில் பெண் சடலம்.. கணவனுக்கு வந்த போன்கால்.. திருப்பூர் பெண் கொலையில் பகீர் தகவல்

கொலை செய்யப்பட்ட பெண்

கொலை செய்யப்பட்ட பெண்

Crime News : திருப்பூரில் குப்பை மேட்டில் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கோவையை சேர்ந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூரில் சாலை ஓரத்தில் இருந்த குப்பை மேட்டில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்குதகவல் வந்தது. இதனையடுத்து அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பை மேட்டின் ஓரத்தில் தலையில் அடிபட்ட நிலையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.     விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தெக்கலூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பாகுல் என்பவரின் மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது.

சுகன்யாவின் முதல் கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் பாகுல் என்பவரை மறுமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பாகுலை விட்டு பிரிந்து சென்றார். இரண்டாவது கணவரை பிரிந்து சென்ற சுகன்யா, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக அவருடன் வசித்து வந்துள்ளார்.       

இந்நிலையில் இன்று காலை சரவணக்குமார் குடிபோதையில் பாகுலிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உனது மனைவி விஷம் குடித்து விட்டால் உனது மனைவியை யாரோ கொன்று விட்டார்கள், அவளின் உடல் தெக்கலூர் பக்கத்தில் ஒரு குப்பை மேட்டில் இருக்கிறது போய் எடுத்துக் கொள் என்று கூறியுள்ளார்.     

இதுகுறித்து உடனடியாக பாகுல் அவிநாசி காவல்துறையிடம் தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சரவணக்குமாரை தேடி வருகின்றனர்.  மேலும் சம்பவ இடத்தில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட  இரும்பாலான கருவியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Murder, Tamil News