ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அமராவதி மலைப்பகுதியில் தயாராகும் விடுதிகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அமராவதி மலைப்பகுதியில் தயாராகும் விடுதிகள்

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

Tiruppur District | திருப்பூர் மாவட்டம் அமராவதி மலைப் பகுதியில் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விடுதிகள் தயாராகி வருகின்றன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

2023ஆம் புத்தாண்டை வரவேற்று கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். ஆங்காங்கே அதற்கான விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வகின்றன. புத்தாண்டை கொண்டாடுவதற்கான இடங்களையும் தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பல பகுதிகளில் தனியார் விடுதிகள் அதற்னாக ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய அமைந்துள்ள உடுமலை அமராவதி பகுதியில் பல தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இரவு நேர கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் 31ஆம் தேதியும், ஜனவரி 1ஆம் தேதியும் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க போலீசார் மற்றும் வனத்துறையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான, அமராவதி புலிகள் காப்பகத்தை ஒட்டி இந்த தனியார் தங்கும் விடுதிகள் இருப்பதால், இரவு நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் அத்துமீறாமல் இருபபதைத் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

அதேசமயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் வெடிகள் எதுவும் வெடிக்காமல், பாதுகாப்பான முறையில் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

First published:

Tags: Local News, New Year 2023, New Year Celebration, Tiruppur