திருப்பூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தலித் விடுதலை கட்சியிடம் வாக்குவாதம் நடத்தினர்.
திருப்பூர் அவிநாசி சாலையில் விவேகானந்தா சேவாலயம் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தலித் விடுதலை கட்சி பொதுச்செயலாளர் செங்கோட்டையன், ‘நீதி வேண்டும்’ என காப்பகத்தின் முன்பு இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினார்.
இதையும் வாசிக்க: இனி வீட்டிற்கு வரப்போகும் சிறிய அளவிலான சிலிண்டர்கள்.. 2கிலோ, 5 கிலோவில் அறிமுகம்..!
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், குழந்தைகள் இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெறட்டும், இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Food poison, Hindu Munnani, Tiruppur