திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் அரசு பள்ளியில் உரிய வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்களை மரத்தடி நிழலில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொல்லிகாளிபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப்பள்ளியில் 406 பேரும், மேல்நிலைப் பள்ளியில் 864 பேரும் என 1,200 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சுற்று வட்டாரங்களில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் பயிலும் நிலையில், மேல்நிலை பள்ளிக்கு 8 வகுப்பறைகளும், தொடக்கப்பள்ளிக்கு 1 வகுப்பறை என 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கூரை பழுதடைந்த நிலையில் ஓடுகள் மாற்றும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வருவதால், மாணவர்களை அமரவைத்து பாடம் எடுக்க வகுப்பறை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே போல் மேல்நிலைப் பள்ளியில், 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 24 வகுப்புகள் உள்ளதாகவும் ஆனால் தற்போது 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன எனவும், 2017ஆம் ஆண்டு 10 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி துவங்கிய நிலையில், தற்போது வரை முழுமையாக கட்டி முடித்து வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளி கட்டிடம்
இதனால், மாணவர்களை மரத்தடி நிழலில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடமெடுத்து வருகின்றனர். மேலும், ஒரு வகுப்பறையில் இரண்டு , மூன்று வகுப்பு மாணவர்களை அமரவைத்தும், கலையரங்க நிழற்குடையில் மாணவ மாணவிகளை அமரவைத்தும் பாடம் நடத்தி வருகின்றனர்.
Must Read : குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த வேண்டும் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.