ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

மாற்றுத்திறனாளியை தாக்கி அரசு பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துநர்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

மாற்றுத்திறனாளியை தாக்கி அரசு பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துநர்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

பயண பாஸ் இருந்தும் மாற்றுத்திறனாளியை கீழே இறக்கி விட்ட  அரசு பேருந்து நடத்துனர்

பயண பாஸ் இருந்தும் மாற்றுத்திறனாளியை கீழே இறக்கி விட்ட  அரசு பேருந்து நடத்துனர்

திருப்பூரில் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி பயண பாஸ் இருந்தும் கீழே இறக்கி விட்ட அரசு பேருந்து நடத்துனர். இதனை வீடியோ எடுத்த மகனையும் தாக்கியதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணியை இறக்கி விட முயன்று அவருடன் சென்ற மகனையும் நடத்துநர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பாணி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர். இவருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரை வழி நடத்த உடன் ஒருவர் செல்லவும் பாஸில் வசதி உள்ளது. இந்நிலையில் இன்று மாலை சத்தியராஜ் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டி பிரிவில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்தில் ஏறி உள்ளார்.

மனைவிக்கு பெண்களுக்கான இலவச பயணம் என்பதால் தனக்கும் தனது மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் நடத்துநர் முத்துக்குமார் உங்கள் மனைவிக்குதான் பாஸ் உள்ளது. மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் 3 பேரையும் கீழே இறங்க சொல்லி உள்ளார். இதனை சத்தியராஜின் 17 வயதான மகன் சிபிராஜ் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடந்துநர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார்.

Also see... ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் மீண்டும் குறைப்பு!

பாதிக்கப்பட்ட சத்யராஜ் இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bus, Tiruppur