ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி - சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி - சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

உயிரிழந்த மாணவி ஆனந்தி | நீட் பயிற்சி மையம்

உயிரிழந்த மாணவி ஆனந்தி | நீட் பயிற்சி மையம்

காதல் விவகாரத்தினை அறிந்து தந்தை கண்டித்ததால் மாணவி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

   திருப்பூரில் கடந்த புதன்கிழமையன்று  நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவி ஆனந்தி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே காமராஜர் சாலையில் தனியார் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது. இந்த கட்டிடத்தில் பணிகள் நிறைவடையாமல் ஜன்னல் அமைக்கப்படாமல் உள்ளது.  இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் இங்கு 2 மாதமாக பயின்று வரும் 17 வயது  மாணவி ஆனந்தியின் தந்தை  பயிற்சி மையத்துக்கு வந்திருக்கிறார். தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஆனந்தி,  திடீரென மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து இருக்கிறார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

  காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் விஷம் அருந்தி பள்ளி மாணவி தற்கொலை - ஓசூரில் சோகம்

  இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த மாணவி ஆனந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காதல் விவகாரத்தினை அறிந்து தந்தை கண்டித்ததால் மாணவி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Thiruppur