Home /News /tiruppur /

கேங் லீடர் யார் என்பதில் போட்டி.. அதிகாரம் செய்த நண்பனை அடித்துக்கொன்ற ரவுடிகள் - திருப்பூரில் பரபரப்பு

கேங் லீடர் யார் என்பதில் போட்டி.. அதிகாரம் செய்த நண்பனை அடித்துக்கொன்ற ரவுடிகள் - திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் கொலை

திருப்பூர் கொலை

கேங் லீடர் யார் என்ற போட்டியில் நண்பனை கொன்ற ரவுடிகள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மகன் சுரேஷ் (வயது29). இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார். இவர்கள்மீது திருப்பூர் காவல் நிலையங்களில் அடிதடிஉள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சந்திராபுரம்அருகே உள்ள டாஸ்மாக் மது பாரில் மது அருந்தினர்.

அப்போது சுரேஷ் அவரது நண்பர்களிடம், நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத் தான் இனி நீங்கள் கேட்க வேண்டும். நான் சொல்கிறபடி எதிராளிகளை நீங்கள் அடிக்க வேண்டும். நான் தான் உங்களுக்கு பணம் பெற்று கொடுக்கிறேன். எனவே எனக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்றார். இதற்கு அவரது நண்பர்கள்  5 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாங்கள் சொல்கிறபடி நீ நடந்து கொள் என தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து பாரில் இருந்து  6 பேரும் வெளியேறினர் அதன் பிறகும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நண்பர்கள் 5பேரும் சேர்ந்து பட்டா கத்தியால் சுரேசை சரமாரியாக வெட்டினர். இதில் சுரேசின் தலையில் பலத்தவெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து நண்பர்கள் 5பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.  சுரேஷ் பிணமாககிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர்.

Also Read: பணத்தை பங்கு போடுவதில் தகராறு - ஆவடியில் இளைஞர் அடித்துக் கொலை

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் , சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேசை கொலை செய்த அவரது நண்பர்கள்மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். யார் தலைவன் என்ற போட்டியில் நண்பனை ரவுடிகள் சேர்ந்து  வெட்டி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Death, Murder, Police arrested, Tamil News, Tirupur

அடுத்த செய்தி