Home /News /tiruppur /

மின்கட்டண உயர்வுக்கு எதிராக விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மின்கட்டண உயர்வுக்கு எதிராக விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

tirupur | புதிய மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் 1500 நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மண்டபத்தில் காடா துணி உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும் உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் திருப்பூர் காடா துணி உற்பத்தியாளர்கள் மற்றும் கழிவு பஞ்சு நூற்பாலைகள் வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Also see... முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள் - திருச்சியில் கமல் பேச்சு



இந்த வேலை நிறுத்தத்தில் 1500 நிறுவனங்கள் ஈடுபட உள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு 100 கோடி காடா துணி உற்பத்தி மற்றும் 75 கோடி கழிவு பஞ்சு உற்பத்தி பாதிக்கப்படும் எனவும் இதனால் இத்தொழிலை நம்பி உள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாதா விசைத்தறிக்கு 30 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களால் இந்த கட்டண உயர்வை எந்த வகையிலும் செலுத்த இயலாது என்பதால் தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக விசைதறி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறியை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Electricity bill, Thiruppur, Work Strike

அடுத்த செய்தி