Home /News /tiruppur /

விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி.. உரிமத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்

விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி.. உரிமத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்

குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பெண் விவசாயிகள்

குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பெண் விவசாயிகள்

Tiruppur | பல்லடம் அருகே  சட்டவிதிகளை மீறி இயங்கும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 7-வது நாளாக விவசாயி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு விவசாய அமைப்புகள் கிராம மக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்ட விதிமுறைகளை மீறி  கல்குவாரி இயங்கி வருகிறது. இதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 30 ஆம் தேதி முதல் கொத்து முட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் தனது சொந்த இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனியார் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது , உட்பட பல்வேறு விதி மீறல்கள் இருப்பது தெரிந்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கனிமவளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 7 நாட்களாக தனி நபராக விவசாயி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில்  விவசாயிக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் கல்குவாரியில் குதித்து போராட்டம்  நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், விவசாயிகள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றதில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனால் விவசாயிகள் கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து கல்குவாரியை நோக்கி புறப்பட்டனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் கல்குவாரிக்குள் நுழைய முற்பட்டதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்குவாரியின் முன்பு 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Also see... ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை..! கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

கல் குவாரியை மூடும் வரையிலும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Farmers, Protest, Tiruppur

அடுத்த செய்தி