ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

சிறப்பாக ஆடு வளர்த்த அண்ணாமலைக்கு ’குட்செப்பர்ட்’ பட்டம் - கார்த்திகேய சிவசேனாதிபதி விமர்சனம்!

சிறப்பாக ஆடு வளர்த்த அண்ணாமலைக்கு ’குட்செப்பர்ட்’ பட்டம் - கார்த்திகேய சிவசேனாதிபதி விமர்சனம்!

அண்ணாமலை - கார்த்திகேய சிவசேனாதிபதி

அண்ணாமலை - கார்த்திகேய சிவசேனாதிபதி

அண்ணாமலை வாட்சின் விலை அரசிய களத்தில் பேசுபொருள் ஆகிவரும் நிலையில், புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி அது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kangeyam, India

அண்ணாமலைக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு குட் செப்பர்டு, பட்டத்தை வழங்குகிறேன் என கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு காங்கேயம் வந்த கார்த்திகேய சிவ சேனாபதிக்கு காங்கேயத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை ஜோசியரை பார்த்து விட்டு பில் கொடுப்பார் போல. இதற்கென்ன நேரம் காலமா பார்ப்பார்கள்? பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  எடப்பாடி பழனிசாமி அனுப்பியது டம்மி நோட்டீஸ்.. ஓபிஎஸ் அதிரடி பேச்சு!

மேலும் தேசபக்தி என்பது ஒரு ஐயோக்கியனின் கடைசி புகலிடம் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த கருத்தை மேற்கொள்காட்டிய அவர், அண்ணாமலை கட்டி உள்ள வாட்ச் விலை 5 லட்சம், 12 லட்சம் என்கிறார்கள். 125 ஆடுகள் விற்றால்தான் இந்த வாட்ச் வாங்க முடியும். கொங்கு பகுதியில் ஆடு மேய்ப்பதுதான் பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. அவ்வளவு பிரமாதமாக இவர் ஆடு மேய்த்திருந்தால் அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கட்டும். நாங்கள் வாட்ச் வாங்கா விட்டாலும் எங்களின் கடன்களை அடைத்து பிள்ளைகளை படிக்க வைப்போம்” என தெரிவித்தார்.

மேலும் அந்த வாட்ச் வாங்குகிற அளவிற்கு நன்றாக ஆடுகளை மேய்த்து, சிறப்பாக ஆடு வளர்த்த அண்ணாமலைக்கு கிருஸ்துமஸை முன்னிட்டு ‘குட்செப்பர்டு’ என்ற சிறந்த ஆடு மேய்பர் என்ற பட்டத்தை வழங்குகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP, DMK