ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட மான்கறி.. சமையல் நேரத்தில் நுழைந்த வனத்துறை.. அதிமுக பிரமுகர் கைது!

வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட மான்கறி.. சமையல் நேரத்தில் நுழைந்த வனத்துறை.. அதிமுக பிரமுகர் கைது!

மான் (கோப்புப்படம்) - கைதான அதிமுக பிரமுகர்

மான் (கோப்புப்படம்) - கைதான அதிமுக பிரமுகர்

Tiruppur News : உடுமலை அடுத்த திருமூர்த்தி நகர் பகுதியில் சமைப்பதற்காக வீட்டில் உயிரிழந்த மானை பதுக்கி வைத்திருந்த அதிமுக பிரமுகர் கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, குரங்கு, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

அவை உணவு தேவைக்காகவும், நீர் அருந்துவதற்காகவும் மலைப்பகுதியில் இருந்து அணை பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்நிலையில், நீச்சல் குளம் அருகே உடுமலை திருமூர்த்தி மலை சாலையை மான் ஒன்று கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 'பாரதி பிறந்த மண்ணில்..'' கான்வாய் வாகனத்தில் மேயர் தொங்கியது குறித்து பேசிய ஆளுநர் தமிழிசை!

இதனைத்தொடர்ந்து அவ்வழியாக வந்த திருமூர்த்தி நகர் பகுதி சார்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்ராஜ் என்பவர் சாலையில் இறந்து கிடந்த மானை தனது வீட்டிற்கு எடுத்து சென்று சமைப்பதற்காக வீட்டில் பதுக்கி சமையல் வேலைகளை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு செந்தில்ராஜ் வீட்டில் சோதனை செய்ததில் மான் கறி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மான்கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் செந்தில்ராஜ் மீது வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அப்பகுதியில் மான் கறியை வேற யாராவது எடுத்துச் சென்றுள்ளனரா என வனத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

செய்தியாளர் : சக்திவேல் - பொள்ளாச்சி

First published:

Tags: Local News, Tiruppur