பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த உரிமையாளர் உட்பட இருவர் கைது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள குளத்தில் கடந்த 11-ம் தேதி கழுத்தறுப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் குன்னத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த நபர் மயிலாடுதுறையை சேர்ந்த ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது.
குளத்தின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆகாஷ் பணியாற்றிய பனியன் நிறுவனத்தின் உரிமையாளர் அஜித் மற்றும் ஒரு இளைஞர் என மூவர் சேர்ந்து வந்ததை கண்டறிந்தனர். உடனடியாக திருப்பூர் ராதா நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் அஜித்(25) மற்றும் அவரிடம் பணியாற்றும் கார்த்திக்(26) என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த அஜித் திருப்பூர் ராதா நகரில் சொந்தமாக சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற நண்பரை பணியமர்த்தி உள்ளார். பனியன் நிறுவனத்தில் டைலராக மற்றும் செக்கிங் வேலைக்கு ஏராளமான பெண்கள் வந்த நிலையில் அவர்களிடம் ஆகாஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பெண்கள் வேலைக்கு வராமல் தவிர்த்து உள்ளனர். தகவல் அறிந்த அஜித் ஆகாஷை கண்டித்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் அஜித்தின் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு மயிலாடுதுறை சென்றுள்ளார்.
Also Read: சென்னை வங்கிக்கொள்ளை.. 10நாள் திட்டம்.. சிக்கிய மேனேஜர் - நடந்தது என்ன?
தொடர்ந்து ஆறு மாதங்களாக அவரை வேலைக்கு அழைத்தும் இருசக்கர வாகனத்தை திருப்பித் தராமல் அலை கழித்துள்ளார். அஜித் தொடர்ந்து ஆகாஷை அழைத்ததன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆகாஷ் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை கொண்டு வராமல் ஏமாற்றியதை அறிந்த அஜித் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை உதவிக்கு அழைத்துக் கொண்டு ஆகாஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி கடந்த பத்தாம் தேதி அன்று இரவு ஆகாஷை மது அருந்த அழைத்துள்ளனர். மூவரும் சேர்ந்து குன்னத்தூர் அருகே உள்ள குளத்திற்கு சென்று மது அருந்தி உள்ளனர் அப்பொழுது ஆகாஷ் எதிர்பார்க்காத சமயத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆகாஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதைஅடுத்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Sexual abuse, Tamil News, Tamilnadu, Tiruppur, Tirupur