ஹோம் /நியூஸ் /Tiruppur /

Tiruppur : அதிகரிக்கும் கொரோனா.. திருப்பூரில் தயார் நிலையில் கொரோனா வார்டுகள்!

Tiruppur : அதிகரிக்கும் கொரோனா.. திருப்பூரில் தயார் நிலையில் கொரோனா வார்டுகள்!

திருப்பூர் - மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

திருப்பூர் - மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

Tiruppur District : மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன .

  கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றால் அதிகளவு பாதிப்பு இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியதால் பாதிப்பு குறைந்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநில சுகாதார துறையும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

  சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும், தேவையான கருவிகள், ஆக்ஸிஜன் படுக்கைகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.

  இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில் , திருப்பூர் மாவட்டத்தில் தற்பொழுது 9 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்றானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 சிறப்பு கொரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று  அதிகரிப்பது தெரிந்தால் மேலும் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று  சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  ஒருவர் குணமடைந்தார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  செய்தியாளர் : காயத்ரி வேலுசாமி, திருப்பூர்

  Published by:Arun
  First published:

  Tags: Corona, Covid-19, Tiruppur