Home /News /tiruppur /

சிவன்மலை முருகன் கோவிலில் சர்ச்சைக்குரிய ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு போஸ்டர்கள் நீக்கம்..

சிவன்மலை முருகன் கோவிலில் சர்ச்சைக்குரிய ஆடை கட்டுப்பாடு அறிவிப்பு போஸ்டர்கள் நீக்கம்..

பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு

பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு

Tirupur District: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன்மலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான உடை கட்டுப்பாடுகளும் இல்லை என சிவன்மலை உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.

    சிவன்மலை கோவிலில் எந்த விதமான உடை கட்டுப்பாடுகளும் இல்லை  உதவி ஆணையர் அறிவித்துள்ளது நீண்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாகும். வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத வகையில் சிவன் மலை கோவிலுக்கு சிறப்பு ஒன்று உள்ளது. அது, அந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியே ஆகும். முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி உத்தரவு பெட்டிக்குள் ஒரு குறிப்பிட்ட பொருளை வைக்கச் சொல்வார் என்றும் அந்த பொருளினால் சமுதாயத்தில் நன்மை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவன்மலை செல்லும் பாதையை காட்டும் கூகுள் மேப்..



    இத்தனை சிறப்புகள் வாய்ந்த சிவன்மலை சுப்பிரமணியரை தரிசிக்க, திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வர். தற்போது காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை தேடி வந்து இங்கு தனியாகவும் குடும்பத்துடனும் தங்கி உள்ள வட மாநிலத்தவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன்மலையில் சாமி தரிசனம் செய்ய சமீப காலமாக குவிந்து வருகின்றனர்.

    சிவன்மலை


    இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பு கோவிலின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான துண்டறிக்கை போன்று கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெகின்ஸ் உடையில் பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது  சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

    ஆடை கட்டுப்பாடு குறித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்..


    இந்நிலையில்,  இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் விமலா கூறும்போது, 'கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சொல்லியதாகக் கூறி, கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் சொல்லி, காவலாளி ஓட்டி உள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கவனத்துக்கு கொண்டு வராமல் இதனை செய்துள்ளார். தற்போது இதனை அகற்றிவிட்டோம். அரசு எதுவும் சொல்லாமல், இனி இதுபோன்று செய்யக்கூடாது' என எச்சரித்துள்ளோம் என்றார்.

    செய்தியாளர்: காயத்ரி வேலுசாமி - திருப்பூர்
    Published by:Arun
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி