ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவன் கைது... ஆம்பூரில் பரபரப்பு

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவன் கைது... ஆம்பூரில் பரபரப்பு

கல்லூரி மாணவன் கைது

கல்லூரி மாணவன் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupattur, India

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை  சேர்ந்தவர் அனாஸ் அலி (வயது 22) கல்லூரி மாணவரான இவருக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவனை விசாரணைக்காக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டம் அணைகட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  சுமார் 15  மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மாணவன் அனாஸ் அலி  பங்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து செயல்படும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இசுலாமிய இயக்கங்களின் ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை விரும்பி லைக் (Like), பகிர்ந்து (share) செய்துள்ளதாக தெரியவந்தது.

மேலும் தடை செய்யப்பட்ட இசுலாமிய இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்ததும், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைவது குறித்த கோப்புகளையும் சேகரித்திருந்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து  2 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து இந்தியாவையும் அதன் நட்பு நாடுகளையும் முஸ்லீம் நாடாக மாற்ற முக்கிய நபரை கொலை செய்யவும், வீடுகளில் குண்டுவைக்கவும் சதி திட்டம் தீட்டியதாக திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Must Read : 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி... 4வது மனைவியால் சிக்கிய காதல் மன்னன்

இந்நிலையில், மாணவன் அனாஸ் அலி மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - M.வெங்கடேசன் 

First published:

Tags: Ambur, Arrested, College student, ISIS, Terrorists, Tirupattur