Home /News /tiruppur /

தொழிலதிபர்கள் மட்டுமில்லாமல் தொழிலாளர்களும் வளரும் ஊர் திரூப்பூர் - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தொழிலதிபர்கள் மட்டுமில்லாமல் தொழிலாளர்களும் வளரும் ஊர் திரூப்பூர் - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

,திருப்பூர் தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூரில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில்முனைவோர் மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ருபாய் 167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தும் ,  பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் , புரிந்துணர்வு ஒப்பந்தகளும் போடப்பட்டன.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, திருப்பூர் ,  தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி.  இன்றைய தொழிலாளி ,  நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்கள். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாவார்கள் , அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வு செழிக்கிறது.

Also Read : அதிமுக அலுவலகம் சூறையாடல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக அரசு

MSME நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருவதாகவும் ,  இத்தகைய தொழில்கள் குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம் என்றும் விளக்கம் அளித்தார். அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று நினைக்கும் தமிழக அரசானது தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இத்தகைய முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது.

கடந்த 15 மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, இதன் மூலம் 2,20,727 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்த்து 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இதில் 1300 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 MSME நிறுவனங்களும் அடங்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.

 
Published by:Vijay R
First published:

Tags: CM MK Stalin, Tiruppur

அடுத்த செய்தி