ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

நள்ளிரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து திருட்டு - 6 பேரை கைது செய்த திருப்பூர் போலீஸார்

நள்ளிரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து திருட்டு - 6 பேரை கைது செய்த திருப்பூர் போலீஸார்

செல்போன் பறிப்பில் கைதானவர்கள்

செல்போன் பறிப்பில் கைதானவர்கள்

Tiruppur News : பல்லடம் அருகே நடந்து சென்ற நபரை மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார்(23 ). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 13ம் தேதி இரவு 10.30 மணியளவில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹைடெக் பார்க்கின் பின்புறம் தனது நண்பர் முருகேசன் என்பவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் இருவரையும் வழிமறித்து மிரட்டி, முருகேசனை கீழே தள்ளிவிட்டு சசிகுமாரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையும் படிங்க : குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு... கோவையில் அலறியடித்து ஓடிய மக்கள்....

இந்நிலையில், பல்லடம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 6 நபர்களை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், 6 நபர்களும் சேர்ந்து சசிகுமாரை மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற குற்றத்தை ஒப்புக் கொண்டனர் .

இதனையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த காசிராமன், பிச்சமுத்து, இசக்கிபாண்டி, மணிகண்டன், சுரேஷ் மற்றும் பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து களவு பொருளை மீட்டும், வழிப்பறிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Tiruppur