ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

தொழில் பார்ட்னர் கடத்தி வைத்து துன்புறுத்தினார்.. என்னை காப்பாற்றுங்கள்.. கதறி அழும் இளம்பெண்..

தொழில் பார்ட்னர் கடத்தி வைத்து துன்புறுத்தினார்.. என்னை காப்பாற்றுங்கள்.. கதறி அழும் இளம்பெண்..

பிரவீனா

பிரவீனா

பிரவீனாவை, திருச்சிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுள்ளார் சிவக்குமார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palladam, India

தொழில் பார்ட்னர் அழைத்துச் சென்று அடைத்து வைத்து பல கோடிக்கு செக் கையெழுத்து பெற்றுக் கொண்டு தன்னை துன்புறத்துவதாக கதறி அழும் பெண் ஒருவரின் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீனா, சேகர் தம்பதியினர். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் மங்கலம் சாலை பகுதியில் பிரவீனா பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.

இந்நிலையில் வாடிக்கையாளராக அங்கு வந்து செல்லும் தமிழ்செல்வி மற்றும் அவரது கணவர் சிவகுமார் ஆகியோர் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என கூறி இவரது வீட்டின் பத்திரத்தை பெற்று வங்கியில் ரூ. 3 கோடி வங்கி கடன் பெற்றுள்ளார். ஆனால் பிரவீனாவிடம் ரூ. 10 லட்சம் மட்டுமே கடன் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வங்கியில் பணம் செலுத்தாததால் வீட்டை ஏலத்தில் விட வங்கி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவக்குமாரிடம் பிரவீனா கேட்ட போது, தான் தொழில் விஷயமாக திருச்சி வரை செல்வதாகவும் அங்கு சிலர் பணம் தர வேண்டும் எனவும் உடன் வந்தால் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதனை நம்பி சென்ற பிரவீனாவை, திருச்சிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுள்ளார் சிவக்குமார்.

இந்நிலையில் தன்னை காப்பாற்றும் படி அப்பெண் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்க: சென்னையில் தங்கி போதைப் பொருள் விற்பனை... நைஜீரிய பெண் கைது

கடந்த 10 நாட்களுக்கு முன் பிரவீனாவின் தாய் சிலோமினா, தனது மகள் காணாமல் போனதாக பல்லடம் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனாவை தேடி வந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Crime News, Palladam, Tiruppur, Video