Home /News /tiruppur /

பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகளை தாக்கிய போதை ஆசாமிகள்... பல்லடம் அருகே நள்ளிரவில் சாலை மறியல்

பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகளை தாக்கிய போதை ஆசாமிகள்... பல்லடம் அருகே நள்ளிரவில் சாலை மறியல்

நள்ளிரவில் சாலை மறியல்

நள்ளிரவில் சாலை மறியல்

Tirupur : நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை சுமார் மூன்று மணிநேரம் நடந்த சாலை மறியல் போரட்டத்தால் பல்லடம் திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே குடிபோதையில் காரில் வந்த நபர்கள் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகளை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து அவர்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் அருண்குமார் ஓட்டி வந்தார். நடத்துனர் மாரிமுத்து மற்றும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். பல்லடத்தை அடுத்த மஹாலட்சுமி நகர் அருகே வந்த போது எதிர்புறத்தில் திருப்பூரில் இருந்து வந்த கார் ஒன்று திடீரென்று வலதுபுறம் திரும்பி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் அருண்குமார் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து பேருந்தின் முன்னால் சென்ற கார், பேருந்துக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. முன்னே சென்ற கார் அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்துக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் இது குறித்து ஓட்டுனர் அருண்குமாரிடம் தெரிவித்து பேருந்தை நிறுத்த சொல்லி உள்ளனர். பேருந்தை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் ஓட்டுனர் அருண்குமாருடன் சென்ற பயணிகள் காரில் வந்தவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது காரில் வந்தவர்களுடன் மண்டபத்துக்குள் இருந்தவர்கள் சேர்ந்து, பேருந்து ஓட்டுனர் அருண்குமார், நடத்துனர் மாரிமுத்து மற்றும் பயணிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவ்வழியாக சென்ற பேருந்து ஓட்டுனர்கள் தகவல் அறிந்து பேருந்துகளை பல்லடம் திருப்பூர் சாலையிலேயே நிறுத்தி விட்டு மண்டபத்தின் முன்பு திரண்டனர்.

அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்கள் மண்டபத்திற்கு உள்ளே சென்று ஒளிந்து கொண்டதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, மண்டபத்தின் முன்னே நின்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் நடந்த வாக்குவாதம்


இது குறைத்து தகவல் அறிந்து அங்கு வந்த பல்லடம் போலீசார், அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகளை தாகியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேருந்துகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பின்னர், முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர். கண்டிபாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர், போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வளைகாப்பு விழாவிற்கு வந்த நபர்கள் குடிபோதையில் இருந்ததும் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளுடன் அத்துமீறி மண்டபத்துக்குள் நுழைந்து தங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனை தொடர்ந்து பயணிகள் மற்றும் ஓட்டுனர், நடத்துனரை தாக்கியதாக செல்வகுமார் (28), பிரேம் (25), சண்முகம்(30) ஆகிய மூன்று பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை நடந்த இந்த சம்பவத்தால் பல்லடம் திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Must Read : உஷார்... சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

அதனை தொடர்ந்து ஓட்டுனர் அருண்குமார், நடத்துனர் மாரிமுத்து ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Drunk an drive, Govt Bus, Palladam, Tiruppur

அடுத்த செய்தி